பாகிஸ்தானுக்கு 5வது வெற்றி

ஷார்ஜா: ஸ்காட்லாந்து அணியை 72  ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் தொடர்ச்சியாக 5வது வெற்றியுடன் (10 புள்ளி), 2வது பிரிவில் முதலிடம் பிடித்தது. ஷார்ஜாவில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. ரிஸ்வான் 15 ரன், பகார் 8 ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் 9.4 ஓவரில் 59 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், பாபர் – ஹபீஸ் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். ஹபீஸ் 31 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். பொறுப்புடன் விளையாடிய பாபர் 66 ரன் (47 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சோயிப் மாலிக் 18 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. மாலிக் 54 ரன் (18 பந்து, 1 பவுண்டரி, 6 சிக்சர்), ஆசிப் அலி 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.அடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து 20 ஓவரில் 6  விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து தோற்றது. ரிச்சிபெரிங்கடன் (அவுட் இல்லை) அதிகபட்சமாக 54 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். ஜார்ஜ் முன்சே 17 ரன், மிக்கேல் லீஸ்க் 14 ரன் எடுத்தனர். பாக். தரப்பில் சதாப் கான் 2, அபிரிடி, ஹரிஷ் ரப், ஹசன் அலி தலா 1 விக்கெட் வீழ்த்தினார்….

Related posts

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் சின்னர் ராடுகானு வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து: கால்இறுதியில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி; சொந்த மண்ணில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது ஜெர்மனி