பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் ‘த்ரில்’ வெற்றி

ஜமைக்கா: பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே முதல் டெஸ்ட் கிங்ஸ்டன்  மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில்  217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல்  இன்னிங்சில் 253 ரன் எடுத்தது. இதையடுத்து 36 ரன் பின்தங்கிய நிலையில்,  2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3ம் நாள் முடிவில் 5 விக்கெட்  இழப்பிற்கு 160 ரன் எடுத்திருந்தது. 4வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங்  செய்தது. கேப்டன் பாபர் அசாம் 55, ஹசன் அலி 28 ரன் அடித்தனர். 83.4 ஓவரில்  203 ரன்னுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், ஜேடன்  சீல்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 168 ரன் இலக்குடன் 2வது  இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியில், கேப்டன் பிராத் வெயிட் 2, பாவல்  4, சேஸ் 22, பொன்னர் 5 ரன்னில் ஆட்டம் இழந்தனர். பிளாக்வுட் அதிகபட்சமாக  55 ரன் எடுத்தார். 151 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கடைசி  விக்கெட்டிற்கு சீல்சுடன் ஜோடி சேர்ந்த கெமர் ரோச் 30 ரன் அடித்தார். 56.5  ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 168 ரன் எடுத்த வெஸ்ட்இண்டீஸ் ஒருவிக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஜேடன் சீல்ஸ் ஆட்டநாயகன் விருது  பெற்றார். இந்த வெற்றி மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெஸ்ட்இண்டீஸ் 12  புள்ளிகளை பெற்றது. 2வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 20ம் தேதி  தொடங்குகிறது….

Related posts

சில்லி பாய்ன்ட்…

கோபா கோப்பை கால்பந்து:10 வீரர்களுடன் விளையாடி பைனலுக்கு முன்னேறிய கொலம்பியா

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம்: வாஷிங்டன் சுந்தர்