பாகற்காய் வற்றல்

செய்முறை:பாகற்காயை வட்டமாக‌ நறுக்கி தேவையான‌ அளவு உப்புச் சேர்த்து வேக‌ வைக்கவும். (அதனுள்ளே இருக்கும் முற்றிய‌ பெரிய‌ விதைகளை நீக்கிவிடலாம்). அரை வேக்காடு வெந்ததும் நீரை சுத்தமாக‌ வடிகட்டிவிட்டு மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். பிறகு ஒரு தட்டில் பரவலாக‌ அடுக்கி வெயிலில் வைத்து நன்கு காய வைக்கவும். ஒரு புறம் காய்ந்ததும் பாகற்காயை திருப்பி வைத்து அதன் மறுபுறத்தையும் நன்கு காயவிடவும். 2 – 3 நாட்கள் வெயிலில் காய‌ வைத்தெடுத்து காற்று புகாதபடி பாட்டிலில் போட்டு வைக்கவும். (நன்கு காய்ந்ததும் வற்றலை கையால் உடைத்தால் உடையும் பதத்தில் இருக்கும்). சுவையான‌ பாகற்காய் வற்றல் தயார். தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.  …

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்