பஸ்சில் கடத்திய மதுபாக்கெட்டுகள் பறிமுதல் மூதாட்டி உள்பட 2 பேர் கைது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு

திருவண்ணாமலை, செப்.5: பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்சில் கடத்திய மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், மூதாட்டி உள்பட 2 பேரை கைது செய்தனர். வெளி மாநில மதுபாக்கெட்டுகள் கொண்டு வந்து திருவண்ணாமலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இரவு நேரத்தில் பெங்களூருவில் இருந்து பஸ்சில் சாதாரண பயணிகள் போல பயணம் செய்யும் சிலர் மதுபாக்கெட்டுகளை கடத்தி வருவது தெரிந்தது. எனவே, திருவண்ணாமலை-செங்கம் சாலையில் நேற்று திருவண்ணாமலை மேற்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், எஸ்ஐ சிவசங்கரன் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, பெங்களூருவில் இருந்து வந்த அரசு பஸ்சில் நேற்று அதிகாலை 3 மணியளவில் 2 பேர், 4 லக்கேஜ் பைகளுடன் அய்யம்பாளையம் புதூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கினர். சந்தேகமடைந்த போலீசார், அவர்களது பைகளை சோதித்தனர். அதில், 767 மதுபாக்கெட்டுகள் கடத்தியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அந்த மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவற்றை பஸ்சில் கடத்திய அய்யம்பாளையத்தை சேர்ந்த நடராஜ் மனைவி மல்லிகா(65), மாரி மகன் காளியப்பன்(55) என்பது ெதரிந்தது. பின்னர், இருவரையும் கைது செய்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெங்களூருவில் இருந்து சொந்த ஊர் திரும்பும் கூலித்தொழிலாளர்கள் போல, அரசு பஸ்சில் பயணம் செய்து மது பாக்கெட்டுகள் கடத்தி வருவதன் பின்னணியில், வேறு சிலரும் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, பெங்களூருவில் இருந்து மது பாக்ெகட்டுகளை கொள்முதல் செய்து, திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கும் நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்