பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் கடும் அவதி

சூளகிரி, ஆக.30: சூளகிரி அருகே ஏனுசோனை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, அலகுபாவி, எலசமாக்கனப்பள்ளி, மேடுபள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல போதிய போக்குவரத்து வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால், கொள்ளப்பள்ளியில் இருந்து ஏனுசோனைக்கு இயக்கப்படும் லாரி, டிராக்டர், டெம்போ ஆகிய வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணித்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். சில நேரங்களில் எந்த வாகனங்களும் கிடைக்காத நிலையில் 5 கி.மீ., தூரம் நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர். மாணவர்கள் நலன் கருதி, அவ்வழியாக பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு