பவானி ஆற்றில் மூழ்கிய மாணவர் சடலம் மீட்பு சித்திரை திருவிழா கோலாகலம் விளையாட்டு போட்டிகளில் 2000 பேர் பங்கேற்பு

மேட்டுப்பாளையம், மே 14: பவானி ஆற்றில் மூழ்கிய புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவர் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் நேற்று காலை மீட்டனர். புதுச்சேரி மாநிலம் பாகூர் மணமேடு பகுதியை சேர்ந்தவர் தசரதன் (46). இவரது மகன் ஆகாஷ் (21). கல்லூரி மாணவர். இவர் கடந்த 11ம் தேதி இரவு தங்களுக்கு சொந்தமான காரில் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் கொடிவேரி, பண்ணாரி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா முடித்து விட்டு மேட்டுப்பாளையம் வந்தனர்.

நேற்று முன்தினம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் மதிய உணவு சாப்பிட்டனர். பின்னர், மேட்டுப்பாளையம் வெள்ளிபாளையம் சாலையில் உள்ள கருப்பராயன் கோயிலை ஒட்டி செல்லும் பவானி ஆற்றில் குடும்பத்துடன் ஆகாஷ் குளித்து கொண்டிருந்தார். அப்போது, அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கினார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தீயணைப்பு வீரர்கள் பவானி ஆற்றில் மூழ்கிய ஆகாஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை கண்டித்துறை என்ற இடத்தில் ஆகாஷ் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து அவரது உடலை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது