பவானிசாகர் அருகே ஊருக்குள் உலா வந்த கரடி கிராம மக்கள் அச்சம்

 

சத்தியமங்கலம்,ஜன.8:பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்த கரடி சாலையில் நடமாடியதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் கிராமங்களில் புகுந்து நடமாடுவது வழக்கமாக உள்ளது.

இதனிடையே நேற்றுமுன்தினம் நள்ளிரவு விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியில் உள்ள சாலையில் நடமாடியது.கரடி நடமாட்டத்தை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்தனர்.இதற்கிடையே ஊருக்குள் புகுந்து சாலையில் நடமாடிய கரடி சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

இந்நிலையில் கரடி சாலையில் நடமாடிய காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கரடி நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்

நெற்பயிரை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மனு

கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை காயரம்பேடு பகுதிக்கு இடமாற்றம் செய்ய கடும் எதிர்ப்பு: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை