பழைய பால்வளம் மனசொடிஞ்சு கிடக்கும் நிலையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘காட்டுப்பாடி பார்டர் செக்போஸ்ட் பெயரை கேட்டாலே டிரைவருங்க அலறி ஓடுறாங்களாமே..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தமிழக – ஆந்திரா ஸ்டேட் பார்டராக காட்டுப்பாடி இருக்குது. இதுக்கு பக்கத்துல போக்குவரத்து செக்போஸ்ட் இருக்குது. இதை கடந்து தான் ஆந்திராவுல இருந்து வர்ற வாகனங்களும், தமிழகத்துல இருந்து ஆந்திராவுக்கு போற வாகனங்களும் போகணும். தற்போது சபரி மலை சீசன் தொடங்கியிருக்குறதால, ஆந்திராவுல இருந்து டிராவல்ஸ் பஸ்கள், வேன்கள்னு நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் காட்டுப்பாடி வழியாக பார்ட்டரை கடந்து போய்ட்டு வருது. இதுல, பார்டர் செக்போஸ்ட்டுல, பர்மீட் வாங்குறதுக்காக டிரைவர்கள் போறாங்களாம். ஆனா, நிர்ணயிச்ச கட்டணத்தை விட, 3 மடங்கு அதிகமாக வசூல் செய்றாங்களாம். பில் மட்டும், கவர்மென்ட் கணக்கு படி கொடுக்குறாங்களாம். ஒவ்வொரு வாகனத்துக்கும் குறைந்தபட்சம் 3கே டூ 7 கே வரைக்கும் வசூல் நடத்துறாங்களாம். சம்திங் கொடுக்க மறுத்தால், பர்மீட் கொடுக்காம, பல குறைப்பாடுகளை கூறி, நாள் முழுவதும் காக்க வெக்குறாங்களாம். அவங்க கேட்குறதை கொடுத்துட்டா பிரச்னை இல்லாம அனுப்பி வெக்குறாங்களாம். இதனால சபரிமலைக்கு செல்லும் டிரைவர்கள் காட்டுப்பாடி செக்போஸ்ட் பெயரை கேட்டாலே அலறிவர்றாங்களாம். இந்த வசூல் வேட்டையை தடுக்க அதிகாரிங்க, திடீர் ஆய்வு செஞ்சி நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்ைக எழுந்திருக்குது’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாநில பொறுப்பில் உள்ளவரை கிண்டல் அடிச்சாங்களாமே தாமரை சொந்தங்கள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கடலோர மாவட்டத்தில் தாமரை கட்சி மாவட்ட செயலாளர் கைதை கண்டித்து கட்சி சார்பில் காக்கி துறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில பொது செயலாளர் ஆனந்தம் என்ற பெயரை கொண்டவர், மாவட்ட செயலாளரை காக்கிகள் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும். காக்கிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். மக்கள்  வரிப்பணத்தில் தான் காக்கிகளுக்கு சம்பளம் வருகிறது. காக்கிகள் மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்கின்றனர். கலவரத்தை தூண்டும் வகையில் தாமரை சொந்தங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். அந்த சூழ்நிலையை மாவட்ட கலெக்டர், எஸ்பி., உருவாக்கிவிடக்கூடாது. 2024ல்  தாமரை மீண்டும் மலரக்கூடும். அப்போது காக்கிகள் துறை எங்கள் பக்கம் திரும்பி வரும். அப்பொழுது தாமரை சொந்தங்கள் யார் என காக்கிகளுக்கு காண்பிப்போம் என்று ஆக்ரோஷமாக பேசி கொண்டே இருந்தார். இதை கேட்டு அதிர்ச்சிக்குள்ளான தாமரை சொந்தங்கள், அமைதி பூமியாக இருந்து வரும் கடலோர மாவட்டத்தை, ஒரு மாநில பொறுப்பில் இருக்க கூடியவரே கலவர பூமியாக்கி விடுவார் போல. சுயநலத்தோடு தான் பேசுகிறாரா அல்லது  போதையில் ஏதும் பேசுகிறாரா. இவரை மாதிரி ஆட்கள் கட்சியில் இருந்தா தாமரை எப்பிடி மலரும்..’’ என கிண்டலாக பேசி தலையில் அடித்து சென்றார்களாம்’’ என்றார்  விக்கியானந்தா. ‘‘பழைய பால்வளம் மனசொடிஞ்சு கிடக்காமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியின் முன்னாள் பால்வளமானவர், சேலத்துக்காரரின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். கோர்ட் நிபந்தனை ஜாமீன் காரணமா சேலத்துக்காரர் கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில், அப்போது இவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால மன வருத்தத்தில் இருந்தார். தன்னை சேலத்துக்காரரின் விசுவாசியாக காட்டிக் கொள்வதற்காக மெடல் மாவட்டத்தின், பட்டாசு நகரில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு  ஏற்பாடு செய்தார். இதில் எதிர்பார்த்த அளவு தொண்டர்கள் கூட்டம் வரவில்லையாம். பணத்தை கொட்டிச் செலவிட்டும், அவரால் பெரிய அளவில் கூட்டம் சேர்க்க முடியவில்லை. இதில் ரொம்பவே சோர்ந்து போயிருக்கிறார். அத்தோடு, தென்மாவட்டத்தில் தேனிக்காரருக்கு, அவரது சமுதாயத்தை சேர்ந்த பலர் ஆதரவாளராக இருப்பதனால், தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் முன்னாள் பால்வளக்காரர் தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறாராம். தனது ஆதரவாளர்களிடம், ‘எப்படியாச்சும் 2 பேரும் சேர்ந்துருவாங்கன்ற நம்பிக்கையில, சேலத்துக்காரர் பக்கம் இருந்து அரசியல் பண்றதுதான் நமக்கு எதிர்காலம்னு நெனைச்சேன். ஆனா, போற போக்கைப் பார்த்தா… சேர்றது மாதிரி தெரியலை. கட்சியும் கரைஞ்சுரும் போல. நம்ம போடுற கணக்கு சரியா வரலேன்னா பேசாம தாமரைக் கட்சிப் பக்கமே தாவிட வேண்டியதுதான்’ என தினமும் புலம்பித்  தவித்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.   …

Related posts

குக்கர் தலைவரின் மெகா பிளானுக்கு தடை போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பலாப்பழக்காரரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

மலராத கட்சி ஒருங்கிணைப்பாளர் நொந்து போய் கிடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா