பழைய ஜெயங்கொண்டபுரத்தில் ஆளவந்தீஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு

கிருஷ்ணராயபுரம், ஜூலை 16: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக மூலவர், அம்பாளுக்கு மற்றும் நந்தி பெருமாளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், திரவியங்கள், பழங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட நந்தி பெருமானுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி