பழைய இரும்பு விற்பதாக கூறி ராமநாதபுரம் வியாபாரியிடம் ரூ.1 கோடி மோசடி: 2 பேர் மீது வழக்கு

திருச்சி: ராமநாதபுரம் மாவட்டம்  காட்டு பரமக்குடி கீழவீதியை சேர்ந்த குமரேசன், சில மாதங்களுக்கு முன், திருச்சி மாநகர கமிஷனரிடம்  புகார் மனு அளித்தார். அதில், ராமநாதபுரம் காட்டு பரமக்குடியில் உரிமம் பெற்று பழைய இரும்பு பொருட்களை மொத்தமாக வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறேன். திருச்சி ஸ்டீல் அண்ட் ரோலிங் மில் நிறுவன நிர்வாக இயக்குநர் சீனிவாசனுக்கு, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பிரசாந்த் ஸ்ரீசைலம் என்பவரிடமிருந்து 4,000 மெட்ரிக் டன் பழைய இரும்பு தளவாட பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளதாக புரோக்கர்கள் வைரவேல், காளி மற்றும் தெய்வேந்திரன் கூறினர். அதன்பேரில் சீனிவாசன், பிரசாந்த் ஆகியோரிடம் பேசி, கிலோ ரூ.21க்கு 4,000 மெட்ரிக் டன் இரும்பு பெற்று கொள்வதாக 2020 பிப்ரவரி 1ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. மொத்தமாக ரூ.3 ேகாடி பேசப்பட்டதுடன் முன்பணமாக ரூ.1 கோடி கொடுப்பதாகவும், நாளொன்றுக்கு 300 டன் வீதம் பழைய இரும்பை எடுத்து செல்வதெனவும் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 2020 பிப்ரவரி 1ம் தேதி ரூ.10 லட்சத்தை சீனிவாசன், பிரசாந்த் ஆகியோரிடம் கொடுத்தேன். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 2ம் தேதி திருச்சி ஸ்டீல் ரோலிங் மில்லில் பிரசாந்திடம் ரொக்கம், பல தவணைகளில் ரூ.2 கோடியும், வங்கி பரிவர்த்தனை மூலமாக ரூ.1 கோடியும் கொடுக்கப்பட்டது.இதில் ஒப்பந்தப்படி நாளொன்றுக்கு 300 டன் பழைய இரும்பு எடை போட்டு லாரியில் ஏற்றி விட வேண்டும். ஆனால் 2020 ஜூன் 12ம் தேதி முதல் ஒப்பந்தப்படி நாளொன்றுக்கு 300 டன் பழைய இரும்பை ஏற்றி விடவில்லை. 20 முதல் 30 டன் வரையிலேயே ஏற்றி விட்டனர். 2020 டிசம்பர் 21ம் தேதி வரை 840 டன் பழைய இரும்பை மட்டுமே ஏற்றி விட்டனர். மீதமுள்ள 3,160 டன் இரும்பை ஏற்றி விடவில்லை. இதுகுறித்து கேட்க முயன்றபோது என்னையும், எனது மேலாளரையும் அனுமதிக்க கூடாது. மீறி வந்தால் அடித்து விரட்டுங்கள் என்று சீனிவாசன், பிரசாந்த் ஆகியோர் கூறியுள்ளனர். பாக்கி இரும்பை தராமல் ஒப்பந்தத்தை மீறி வேறு நபருக்கு இரும்பை விற்று விட்டனர். எனக்கு ரூ.1 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டனர். எனவே 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோசலைராமன் விசாரணை நடத்தினார். இதைதொடர்ந்து நேற்று சீனிவாசன், பிரசாந்த் ஆகியோர் மீது மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 3 பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்….

Related posts

ரூ.40 கோடியை அபகரிக்க தம்பதியை கடத்தி கொடூரமாக கொன்ற கும்பல்: 5 பேர் கைது; ஒருவருக்கு மாவுக்கட்டு

ஏடிஎம் கொள்ளையர்கள் விமானம், கார், கன்டெய்னரில் வந்து சென்னையில் ஒன்று கூடி திட்டம் தீட்டியது அம்பலம்

குடும்பத்துடன் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றபோது தெலங்கானா துணை முதல்வர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது: மேற்கு வங்க போலீசார் அதிரடி