பழுதடைந்த பாலத்தால் பாதிப்பு

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா சோலவயல் பாலம் பழுதடைந்து காணப்படுவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா வாழவயல் அருகே சோலவயல் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். வாழவயல் பகுதியில் இருந்து சோலவயல் பகுதிக்கு  செல்லும் சாலையில் நீரோடையின் குறுக்கே பாலம் உள்ளது. ஏற்கனவே அந்த பாலம் பழுதடைந்து இருந்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்த கனமழைக்கு மேலும் பழுதடைந்து காணப்படுகிறது.தினந்தோறும் ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் பாலத்தின் வழியாக சென்று வரும் நிலையில் வலுவிழந்த பாலம் உடைந்து அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் நிலை உள்ளது. பழுதடைந்த இப்பாலத்தை சீரமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பழுதடைந்த பாலத்தை நெல்லியாளம் நகராட்சி  சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சோலவயல் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்