பழுதடைந்த பழைய அரசு கட்டிடங்கள் அகற்றப்படும்: ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்

செய்யூர்: சித்தாமூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் திமுக ஒன்றியக்குழு தலைவர் ஏழுமலை தலைமையில் நேற்று நடந்தது. வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நடைமுறை செலவினங்கள், பொதுமக்கள் நலன் சார்ந்த முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மேலும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் தவறாது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து ேபசப்பட்டது. தொடர்ந்து, ஊராட்சிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்து அபாயகரமாக உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடி, சத்துணவு மையங்கள், கழிப்பறை கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்றுவது, வடகிழக்கு பருவமழையின் வெள்ளசேத பாதிப்புகள் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதிகளை உடனடியாக சீரமைத்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றியக்குழு துணை தலைவர் பிரேமா சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஞானபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்