பழமையான 114 கோயில்களில் திருப்பணிகள்: வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள தொன்மையான 114 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 47வது வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை, வில்லிவாக்கம் வினை தீர்க்கும் விநாயகர் கோயில், மேற்குமாம்பலம், சத்யநாராயண பெருமாள் கோயில், மயிலாப்பூர் மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் கோயில், திருப்பூர் ஆதியூர் ஆதிநாராயணப்பெருமாள் கோயில், ஊத்துக்குளி கைலாசநாதர் கோயில், ராணிப்பேட்டை வேணுகோபாலசுவாமி கோயில், திருவள்ளூர் பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோயில்  உள்ளிட்ட 114 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மாநில அளவிலாக வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்பட உள்ளது….

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை