பழனி முருகன் கோயிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்

 

ஈரோடு, மார்ச் 4: பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரூ. 34.67 லட்சம் மதிப்பிலான நாட்டுச் சர்க்கரை நேற்று முன் தினம் கொள்முதல் செய்யப்பட்டது. பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று முன் தினம் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,385 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ.2,530க்கும், அதிகபட்சமாக ரூ. 2,550க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ. 2,540க்கு விற்பனையானது.

இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ஒரு மூட்டை ரூ.2,470க்கும், அதிகபட்சமாக ரூ.2,500க்கும், சராசரி விலையாக ரூ. 2,490க்கும் விற்பனையானது. இதில், மொத்தம் 83 ஆயிரத்து 100 கிலோ எடையிலான 1,385 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின. இதன் விற்பனை மதிப்பு ரூ. 34 லட்சத்து 67 ஆயிரத்து 750 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை