பழனி அருகே விவசாயிகள் நடத்திய நீண்ட போராட்டத்திற்கு தீர்வு: ஒரே நேரத்தில் 160 விவசாயிகளின் நிலங்களுக்கு பட்டா வழங்கல்….

பழனி : பழனி அருகே உள்ள கிராமங்களில் 40 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்து வரும் நிலங்களுக்கு பட்டாக்கள் வழங்கியுள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன விவசாயிகள் தமிநாடு அரசுக்கு நன்றிகள் தெரிவித்துள்ளனர். பழனி அடுத்த பெரியம்மாப்பட்டி, சின்ன காந்திபுரம், புளியம்பட்டி கிராமங்களில் சுமார் 3000 ஏக்கர் நிலங்களில் இங்குள்ள 160க்கு மேற்பட்ட விவசாயிகள் சுமார் 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றன. இந்த நிலங்கள் நெய்க்காரப்பட்டி ஜமீன் வசம் இருந்து நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் மீட்கப்பட்டவையாகும். நீண்ட போராட்டம் நடத்தி வந்த தங்களுக்கு பட்ட வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். தங்களுக்கு நில பட்டா கிடைத்துள்ளதால் இனி எளிதாக இலவச மின் இணைப்பு பெறமுடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும், கூட்டுறவு கடன் சங்கங்களில் எளிதில் கடன் கிடைக்கப்பெறும் என்றும், அரசின் இன்ன பிற நலத்தித்திட்ட உதவிகளையும் பெறமுடியும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசிடமும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து தகுதியுள்ள விவசாயிகளுக்கு பட்டா  வழங்கும் வருவாய் துறைக்கு உத்தரவிடப்பட்டது. முதல் கட்டாக சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வந்த 160 விசாயிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.                   …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி