பழனியில் பெய்த கனமழை காரணமாக சண்முக நதியில் வெள்ள பெருக்கு: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை எச்சரிக்கை

திண்டுக்கல்: பழனியில் பெய்த கனமழை காரணமாக சண்முக நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழனியில் நேற்று பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி நீர்த்தேக்கதிற்கு சுமார் 2,500 கனஅடி தண்ணீரை வந்துகொண்டுள்ளது. ஏற்கனவே அந்த நீர் தேக்கமானது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நீர் வரத்து முழுவதும் சண்முகா நதி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அதே போல் பழனியில் உள்ள மற்றொரு அணையான பாலாறு- பொருந்தலாறு அணை பகுதிகளிலும் நேற்றிரவு கனமழையானது பெய்தது. அதன் காரணமாக  பாலாறு- பொருந்தலாறு அணைக்கு நீர் வரத்து சுமார் 4,000 கனஅடியாக உள்ளது. பாலாறு- பொருந்தலாறு அணையும் ஏற்கனவே முழுகொள்ளவை எட்டுள்ளதால், அந்த அணைக்கு வரக்கூடிய 4,000 கனஅடி தண்ணீரும் சண்முக நதியில் வெளியேற்றப்படுகிறது. எனவே சுமார் 6,000 கனஅடி தண்ணீரானது சண்முக நதியில் வெளியேற்றப்பட்டுவரவுகிறது. இந்த சண்முக நதியானது பனூர், கொறித்தரவு வழியாக தாராபுரம் வரை சென்று அமராவதி ஆற்றில் கலக்கிறது. இந்த சண்முக நதி ஆற்றில் தற்போது கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுளளதால், ஆற்றின் இருக்கரையையும் தொட்டவாறு ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் விவசாயிகள் ஆடு, மாடுகளை மேய்க்க செல்லவேண்டாம் எனவும், சண்முக நதியின் கரையோரம் வாசிக்க கூடிய மக்கள் பாதுகாப்பான இருக்கவும் பொதுப்பணித்துறையினர் எச்சரிகை விடுத்துள்ளனர்….

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி