பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப்.9ல் துவக்கம்

பழநி, பிப். 3: பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப்.9ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்க உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் கிழக்கு ரதவீதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு இத்திருவிழா வரும் பிப்.9ம் தேதி இரவு 8.30 மணிக்கு மேல் சிம்ம லக்னத்தில் முகூர்த்தக்கல் ஊன்றுதலுடன் துவங்க உள்ளது. வரும் பிப்.13ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

பிப்.20ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் சிம்ம லக்னத்தில் கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். பிப்.27ம் தேதி இரவு 7.15 மணிக்கு மேல் கன்யா லக்னத்தில் திருக்கல்யாணம் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடைபெறும். பிப்.28ம் தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.29ம் தேதி கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்