பழநி நகரில் சுற்றித்திரியும் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும்

பழநி, ஜூலை 22: பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அச்சுறுத்தலாகவும், பொது சுகதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் பன்றிகளை வளர்ப்பதும், தெருக்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் திரிய விடுவதும் கடுமையான குற்றம் என நகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பழநி நகருக்குள் யாரும் பன்றிகளை வளர்க்கவோ, திரிய விடுவதோ கூடாது. மீறி வளர்க்கப்படும், திரிய விடப்படும் பன்றிகள் எவ்வித முன்னறிவிப்பின்றி பிடிக்கப்பட்டு, நகருக்கு வெளியே அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பிடிக்கப்பட்ட பன்றிகளின் மீது எவரேனும் உரிமை கொண்டாடி வந்தால், அவர்கள் மீது தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சட்டம் 1939 மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 சட்ட விதிகளின்கீழ் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழநி நகரம் கோயில் நகரம் என்பதாலும், தற்போது பக்தர்கள் வருகை அதிகளவு இருப்பதாலும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி இந்நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது’’ என்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை