பழநி கோயிலில் தகவல்களை தெரிந்து கொள்ள பக்தர்கள் கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்த அறிவுரை

பழநி: பழநி கோயிலில் தகவல்களை தெரிந்துகொள்ள கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்தும்படி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளுள் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் வருடம் முழுவதும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்த சஷ்டி என திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும்.  இதனால் இக்கோயிலுக்கு சாதாரண நாட்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், திருவிழா காலங்களில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வர். பழநி கோயிலுக்கு தமிழக பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாநில பக்தர்களும் அதிகளவு வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களிடம் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும், சிறப்பு பூஜைகள் செய்து தருவதாகவும் கூறி பணத்தை சுருட்டுவதற்கு போலி வழிகாட்டிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றனர். இவர்களிடம் பணத்தை பறிகொடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் தற்போது கட்டணமில்லா தொலைபேசி சேவை பழநி கோயில் நிர்வாகம் சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ‘1800 425 9925’ என்ற எண்ணிற்கு போன் செய்தால் பழநி கோயிலில் பூஜைகள் நடைபெறும் நேரம், தங்கும் அறைகள் பதிவு செய்வதற்கான வழிமுறைகள், வின்ச் மற்றும் ரோப்கார் இயக்க நேரங்கள், அதற்கான கட்டண விபரங்கள், பூஜைக்கான கட்டண விபரங்கள், பூஜைக்கு அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும். இது 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தலைமை அலுவலகத்தில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்டம் வரும் 11 மற்றும் 15ம் தேதிகளில் விரிவாக்கம்: எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு