பழநி கீரனூர் சொக்கநாத பெருமாள் கோயிலில் மண்டல பூஜை நிறைவு

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கீரனூர் சொக்காத பெருமாள் கோயிலில் கடந்த மே 11ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடந்து வந்தன. மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று சிறப்பு யாகம் நடந்தது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் உள்ள கலசங்களை வைத்து தீபத்திருமகள் வழிபாடு, விநாயகர் வழிபாடு, புனிதநீர் வழிபாடு, வேள்வி வழிபாடு, எண்திசை காவலர்களை குண்டங்களில் எழுந்தருள செய்தல், நான்மறை ஓதுதல், நாலாயிர திவ்யபிரபந்தம் பாராயணம், திருவமுது படைத்தல் போன்ற பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. தொடர்ந்து நேற்று யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோயிலின் உட்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பெருமாளுக்கு 16 வகை அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் நடந்தன. தொடர்ந்து தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை