பழநி அருகே காட்டு யானைகள் அட்டகாசம்: மக்காச்சோளப் பயிர்கள் சேதம்

 

பழநி, செப். 4:பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரத்திற்குட்பட்ட மலையோர கிராமங்களில் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் சோலார் மின்வேலி அமைத்தல், அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலனேதுமில்லை. பழநி அருகே ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட கோம்பைபட்டி கிராமத்தில் கரும்பு மற்றும் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் காட்டுயானைக் கூட்டம் தற்போது வனப்பகுதியை ஒட்டிய விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன.

இதன்படி பழநி அருகே கோம்பைபட்டி பகுதிக்குள் புகுந்த யானைக் கூட்டம் நேற்று முன்தினம் தர்மதுரை என்பவரது கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. இதுகுறித்து கோம்பைபட்டியைச் சேர்ந்த துரை கூறும்போது, ‘‘எங்கள் பகுதிக்குள் காட்டு யானைகள் அதிகளவு வருகின்றன. சில சமயம் கூட்டமாகவும், சில முறை ஒற்றையாகவும் வந்து தொல்லை தருகின்றன. பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துகின்றன. வனத்துறையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும். சேதமடைந்த பயிர்கள் மற்றும் வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை