பழநியில் பேரிடர் மீட்பு படையினர் ஆலோசனை கூடடம்

பழநி, ஜூன் 14: பழநி தாலுகா அலுவலகத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். கோட்டாட்சியர் சரவணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக்குழு கமாண்டர் சங்கரபாண்டியன் தலைமையில் 23க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ரோப் கார் விபத்திற்குள்ளாகும் நேரத்தில் செயல்படும் விதம், மீட்கும் முறை, விபத்தில் சிக்கியவர்களுக்கு செய்யப்பட வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து ரோப் கார் ஊழியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து ரோப் கார் இயங்கும் இடங்களை பார்வையிட்டனர். இன்று ஆபத்துகால செயல்பாடுகள் குறித்து ஒத்திகை செய்ய உள்ளனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்