பழநியில் சாலையோர வியாபாரிகள் மனு கொடுக்கும் போராட்டம்

பழநி, ஆக. 23: தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயில் உள்ள பழநி அடிவார பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. மேலும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக ஏராளமானோர் சாலையோரங்களில் கடைகள் அமைத்துள்ளனர். இந்நிலையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி சாலையோர ஆக்கிரமிப்புகள் கோயில் நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டது.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி நேற்று 100க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு