பழங்குடிவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வித்தரம் உயர நிரந்தர ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தல்

உடுமலை : உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் குருமலை, மேல் குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு உள்ளிட்ட மலைகிராமங்கள் உடுமலை வனசரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ளது. இவற்றில் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிக்கு மேல் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குருமலையில் 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள்நெல், நிலக்கடலை, தைலப்புல் ஆகியவற்றை சாகுபடி செய்வதோடு, வனப்பகுதியில் விளையும் காட்டுநெல்லி,எலுமிச்சை உள்ளிட்டவற்றை பறித்து விற்பனை செய்தும் வருகின்றனர். மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் மேய்ச்சல் போன்றவற்றையும் தொழிலாக செய்து வருகின்றனர். இதே போல குழிப்பட்டி,மாவடப்பு ஆகியவற்றில் தலா 150 குடும்பங்கள் வீதம் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இம்மக்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுவது தைல விற்பனையாக உள்ளது. தைலப்புல்லினை மூலப்பொருளாக கொண்டு அதனை அரைத்து அதிலிருந்து கிடைக்கும் சாற்றினை பக்குவப்படுத்தி எண்ணெய்யை பாட்டிலில் நிரப்பி தைலமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த தைலமானது தலைவலி,மூட்டுவலி போன்றவற்றிற்கான வலிநிவாரணியாக உள்ளதால் ஒரு லிட்டர் தைலம் சமவெளி பகுதிகளில் ரூ.1300 முதல் ரூ.1500 வரை விற்பனையாகிறது. குடிசைத் தொழில் போல வீடுகள் தோறும் தைலம் காய்ச்சி விற்பனை செய்வதற்கு மலைவாழ்மக்களுக்கு மானியத்துடன் அரசு கடனுதவி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் வீடுகளுக்கு சோலார் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மலைவாழ் மக்களின் குழந்தைகள் பயில துவக்கப்பள்ளி இருந்தாலும் ஆசிரியர் சரிவர வருவதில்லை. எனவே நிரந்தரமாக பணியாற்றும் வகையில் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

விவசாயிகள் நலன் கருதி நடப்பாண்டிலும் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் சக்கரபாணி

பெட்ரோல் குண்டு வீச்சில் சப் இன்ஸ்பெக்டர் காயம்

சென்னை பீச்-காட்பாடி இடையே ‘வந்தே பாரத் மெட்ரோ ரயில்’ சோதனை ஓட்டம்