பழங்குடியின மக்கள் அரசுத்துறை தேர்வு எழுத நீலகிரியில் மையங்கள் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்

ஊட்டி:  பழங்குடியின மக்கள் அனைத்து அரசு துறை தேர்வுகள் எழுதுவதற்கு  ஏதுவாக நீலகிரி மாவட்டத்தில் தேர்வு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி  செல்வராஜ், கடந்த 3 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின  கிராமங்கள் மற்றும் பள்ளிகளை ஆய்வு செய்தார். நேற்று ஊட்டி அருகேயுள்ள கோக்கல் பகுதியில் உள்ள கோத்தர் பழங்குடியின கிராமத்தை பார்வையிட்டு கலந்தாய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கோத்தர் பழங்குடியின  பெண்களுடன் பாரம்பரிய நடமானடினார். பின், தோடர் பழங்குடியின மக்கள்  வசிக்கும் பகல்கோடு மந்து பகுதிக்கு வந்தார். அங்கு அவருக்கு தோடர்  பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். அங்கு  நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், தோடர் பழங்குடியின மக்களை சேர்ந்த பலரும்  தங்களது கோரிக்கைகைள  வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.  இதனை தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், ‘‘அனைத்துத்துறை அமைச்சர்களும்  தங்களது துறைகளில் மக்களுக்கு உள்ள பிரச்னைகளை நேரில் சென்று ஆய்வு செய்து,  அதனை தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இதனை  தொடர்ந்து, நான் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும்  பகுதிகளுக்கு நேரில் சென்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன். வன  உரிமைச்சட்டம் 2006 வெளியிடப்பட்ட 15 ஆண்டுகள் ஆன போதிலும், அதில் பல்வேறு  பிரச்னைகள் உள்ளதாக பழங்குடியின மக்கள் தெரிவிக்கின்றனர். அதனை சீர் செய்ய  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறை  மற்றும் வனத்துறை ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வு கூட்டத்தில்  விவாதிக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளை தமிழக முதல்வரிடம்  தெரிவிப்பேன். பழங்குடியின மக்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை  அறிவித்துள்ளது. அவைகள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  சாதிச்சான்று பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். பழங்குடியின மக்களின்  மேய்ச்சல் நிலம் மீண்டும் கிடைக்க வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை  நடத்தப்படும். பழங்குடியின மக்களின் கிராமங்களுக்கு செல்லும்  சாலைகள் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழங்குடியின  மக்கள் வாழ்க்கை மேம்பட பல்வேறு திறன் மேற்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு  வருகிறது. பழங்குடியின மக்கள் அனைத்து அரசு துறை தேர்வுகள் எழுதுவதற்கு  ஏதுவாக நீலகிரி மாவட்டத்தில் தேர்வு மையங்களை அமைக்க நடவடிக்கை  எடுக்கப்படும்’’ என்றார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர்  பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், கவுன்சிலர் துரை ஆகியோர்  கலந்துக் கொண்டனர். தொடர்ந்து, தோடர் பழங்குடியின பெண்களுடன் நடனமாடி  அசத்தினார். மேலும், தோடர் பழங்குடியின மக்களுடன் தரையில் அமர்ந்து  அவர்களின் பாரம்பரிய உணவை உட்கொண்டார்….

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!