பழங்குடியினருக்கான சமுதாய சமையலறை உருவாக்க வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை:  புதுக்கோட்டையைச் சேர்ந்த எழில் ஓவியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொரோனா ஊரடங்கால் பழங்குடியினர் கடுமையாக பாதித்துள்ளனர். பழங்குடியின மாணவர்களுக்கு சத்துணவு கிடைக்கவில்லை. இம்மாணவர்களுக்கான 225 உண்டு உறைவிட பள்ளிகள் மூடப்பட்டதால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போதுமான வசதி இல்லாததால் இவர்களால் ஆன்லைன் வகுப்புகளிலும் பங்கேற்க முடியவில்லை. எனவே, பழங்குடி மக்களின் உணவு தேவையை நிறைவேற்ற சமுதாய சமையலறையை உருவாக்கவும், மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும், வனப்பகுதியிலுள்ள அரசு அலுவலகங்களை கொரோனா  சிகிச்சை மையங்களாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், மனுவிற்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர். …

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்