பழகிய தோஷம் மறந்து போகுமா?

‘‘விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன். மாவட்ட அமைச்சருடன் மல்லுக்கட்டு காரணமாக, சீட் கிடைக்காததால் மனம் வெறுத்து அமமுகவில் இணைந்து, மீண்டும் சாத்தூர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். சாத்தூர் தொகுதிக்குட்பட்ட முறம்பு பகுதியில் ராஜவர்மன் பொதுமக்களிடையே பிரசாரம் செய்தார். அவரது பிரசாரத்தின் போது அனலடித்தது. ‘‘இந்தத் தேர்தலில் அமமுக வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழலை ஏற்படுத்திய முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி. நான் என்ன தவறு செய்தேன்? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தான் அதிமுகவா? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்ற ஒரு தனிநபருக்காக முதல்வரும், துணை முதல்வரும் என்னை ஒதுக்கினார்கள். காலில் விழுந்து மன்றாடி வேலைக்காரனாக கேட்கிறேன். 2021ல் முதல்வர் எடப்பாடியை, தமிழக  மக்கள் ஆட்சியில் இருந்து அகற்றுவார்கள். அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்’’ என்று, தீப்பொறி பறக்கப் பேசியவர், ேபச்சின் முடிவில், ‘‘இரட்டை இலை சின்னத்தில் எனக்கு வாக்களியுங்கள்’’ என்று பொதுமக்களைப் பார்த்துப் பேசினார். கூடியிருந்த மக்களும், பக்கத்தில் நின்றிருந்த அமமுக தொண்டர்களும் ஒரு கணம் கிர்ர்ர்ரடித்துப் போனார்கள். சலசலப்பைக் கவனித்து, தனது தவறை தாமதமாக புரிந்து கொண்டவர், அசட்டுச் சிரிப்புடன், ‘‘குக்கர் சின்னத்திற்கு வாக்களியுங்கள்’’ என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார். ‘‘அட, விடுங்க தலைவரே… பழக்க தோஷம் அத்தனை சீக்கிரம் மறந்து போகுமா?’’ என அருகே இருந்த நிர்வாகிகள் ஆறுதல் படுத்தினார்களாம்….

Related posts

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு