பள்ளி வாசலில் நீர் மோர் விநியோகம்

 

கோவை, மே 4: கோவையில் கடந்த சில வாரங்களாக கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் நகரின் முக்கிய இடங்களில் நீர்மோர் பந்தல் அமைத்து உள்ளனர். இந்நிலையில், கோவை அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் நேற்று நீர் மோர் பந்தல் துவக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு வந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் நீர்மோர் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

இதனை பொதுமக்கள், குழந்தைகள் என பலர் குடித்து மகிழ்ந்தனர். இதில், தலைவர் அமானுல்லா, செயலாளார் பீர்முகமது, பொருளாளர் பக்கீர் முகமது, முத்தவள்ளி ஜாபர் அலி, துணைத் தலைவர்கள் சையது, உசேன் சாகுல் ஹமீத், கமிட்டி உறுப்பினர்கள் ஆஷிக் அகமது, முகமது யூசுப், நிஜாமுதீன், முகமது இப்ராஹிம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு