பள்ளி வளாகத்தில் நுழையும் போதே மகிழ்ச்சியாக உள்ளது: மாணவ, மாணவிகள் பேட்டி

அபிநயா,  பிளஸ் 2,   ஆர்.எம்.ஜெயின் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்: மாணவ, மாணவிகளின் படிப்பின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இது சரியாக புரியாமல் தவித்தோம். இதனால் ஓரளவுக்கு படித்தோம். இப்போது பள்ளிகள் திறந்து விட்டதால் ஆசிரியர்களுடன் நேரடியாக சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற வாய்ப்பு கிடைத்துள்ளது. பாடங்களையும் குறைத்துள்ளது நல்லதுதான். நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் எடுப்பதற்கு மிக எளிமையாக இருக்கும். ஆசிரியர்களையும், தன்னுடன் பயிலும் மாணவிகளையும் தோழிகளையும் நேரடியாக பார்க்க முடிகிறது. பள்ளி வளாகத்தில் நுழையும் போது ஒரு வித சிலிர்ப்பு ஏற்பட்டது. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அம்பத்தூர்  சேது பாஸ்கரா பள்ளி மாணவி அஸ்வதி (பிளஸ் 2) :  கொரோனா நோய் தொற்று  காலத்தில் வீட்டிற்கு உள்ளேயே சிறகு ஒடிந்த பறவையை போல் இருந்தோம். ஆன்  லைன் கிளாஸ், ஹோம் ஒர்க், வெளியில் செல்ல கூடாது என பல்வேறு இடர்பாடுகள்  இருந்தது. ஆனால், இன்று சிறகு விரிந்த பறவையாக மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு  வந்திருக்கிறேன். இங்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளி தோழிகளை பார்க்கிறோம். மேலும் பள்ளியில் படிக்கும் படிப்பிற்கும், ஆன்லைன்  வகுப்பிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பள்ளி கூடங்களை திறந்த அரசுக்கு  நன்றிகளை மாணவர்கள் சார்பில் தெரிவித்து கொள்கிறேன். எஸ். கீர்த்திவாசன் (பிளஸ் 1) ரெட்டம்பேடு பள்ளி: பள்ளி திறந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய சக மாணவர்களையும்  பள்ளி ஆசிரியர்களும் நேரடியாக சந்தித்து சந்தேகங்களை கேட்டுக் கொள்வேன்.  ஆன்லைனில் படிப்பதைவிட பள்ளிக்கு நேரடியாக சென்று படிப்பது தான் நன்றாக இருக்கும்.கடந்த 3 மாதமாக பள்ளி திறக்காததால் படித்த பள்ளி கண்முன்னே தினமும் நிற்கிறது. பள்ளி திறந்ததால் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சி தருகிறது.டி.குணசேகரன்,  பிளஸ் 1,  ஊத்துக்கோட்டை: நான்  தனியார் பள்ளியில் படித்து வந்தேன். தற்போது அரசு பள்ளியில் 11 ம் வகுப்பு  சேர்ந்துள்ளேன். பல நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறந்துள்ளது மகிழ்ச்சி  அளிக்கிறது. மேலும் மாணவர்களுக்கு தமிழக அரசு பல சலுகைகள் செய்ய உள்ளது  ஆகவே நான் ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்துள்ளேன். எஸ்.சென்மதி, 10ம் வகுப்பு, திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி: அரசு  அறிவிப்பின்படி பள்ளிகளில் திறக்கப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி  அளிக்கிறது ஆன்லைன் வகுப்புகள் மூலம் பல சந்தேகங்களுக்கு பதில் கிடைக்காமல் இருந்தது தற்போது நேரடி வகுப்புகள் நடப்பதால் ஆசிரியரிடம் எவ்வித சந்தேகம் இருந்தாலும் நேரடியாக கேட்டு எடுத்துக் கொள்ளலாம் மேலும் சக மாணவிகளுடன் கலந்து ஆலோசனை செய்து படிப்பதற்கும் நன்றாக இருக்கும் பள்ளி திறந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது .ர. ரக்ஷிதா, 11-ம் வகுப்பு , குமணன்சாவடி, பூந்தமல்லி: நீண்டஇடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆசிரியர்களையும், தோழிகளையும் நேரில் பார்த்தது மிகவும் சந்தோஷம்.  அரசு அறிவித்துள்ள வழிகாட்டு முறைப்படி பாதுகாப்பு விதிகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். நேரில் பள்ளிக்கு வந்து படிப்பதால் பாடங்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.  …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்