பள்ளி வளாகத்தில் தேங்கும் மழை நீரை அகற்ற வேண்டும்: பெற்றோர்கள் வலியுறுத்தல்

 

நத்தம், நவ. 24: நத்தம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நத்தம் நகர்ப்பகுதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் 1,300க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சுற்றிலும் கட்டிடங்களும் நடுவே திறந்தவெளி பகுதியும் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இப்பகுதியில் திடீரென பெய்த மழை காரணமாக, வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது.

இதனால் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் வகுப்பறைகளிலிருந்து வெளியே செல்வதாக இருந்தாலும், வெளியிலிருந்து வகுப்பறைகளுக்குள் செல்வதாக இருந்தாலும், இதனை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. மேலும் தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், ‘‘சிறிய மழை பெய்தாலும் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி விடுகிறது. மழைநீர் தேங்காமல் வழிந்தோட கால்வாய்கள் அமைத்து, முறைப்படி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமமின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்