பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டிகள்

 

ஓசூர், பிப்.2: ஓசூர் அந்திவாடி ஸ்டேடியத்தில் வாக்கர்ஸ் அசோசியேஷன் மற்றும் கேலோ இந்தியா இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே நாளை (3ம்தேதி) மற்றும் 4ம்தேதி ஆகிய இருநாட்கள் கேன்சர் நோய் தடுப்பு விழிப்புணர்வு தடகளப் போட்டிகள் நடத்து கின்றனர். இதில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். போட்டி 12, 14, 16, 18 ஆகிய வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெறும்.

வெற்றி பெறும் மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்குவதோடு தடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை கண்டறிந்து, அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்படும். இப்போட்டிகளில் அனைத்து வகை பள்ளிகளின் மாணவர்களும் பங்கேற்கலாம். போட்டி நடைபெறும் இரு நாட்களும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போட்டி நடத்துபவர்கள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை