பள்ளி மாணவர்களுக்கான ஆதார் பதிவு மையங்கள்: கூடுதல் கலெக்டர் துவக்கி வைத்தார்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள ஆர். எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் என்.ஒ.சுகபுத்ரா ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஆதார் பதிவு மையங்களையும், ஆதார் பதிவுகளையும் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின்படி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் ஆர்.எம். ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான ஆதார் விவரங்களை புதுப்பிக்கும் திட்டத்தினை எல்காட் நிறுவனம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து துவக்கி வைத்தது. அதிக ஆதார் எண் பெறப்படாத பகுதிக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய ஆதார் பதிவு மற்றும் பிழைத்திருத்தம் ஆகியவை மேற்கொள்ளப்படும். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் ஆதார் மையங்கள் செயல்பட உள்ளது. இவ்வாறு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஒ.சுகபுத்ரா தெரிவித்தார்.

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்