பள்ளி மாணவர்களின் நலன் கருதி கனரக வாகன நேரத்தை மாற்ற வேண்டும் சொக்கனூர் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

 

கிணத்துக்கடவு, மே 3: பள்ளி மாணவர்களின் நலன் கருதி கேரளாவிற்கு செல்லும் கனரக வாகனங்களின் நேரத்தை மாற்ற வேண்டும் என சொக்கனூர் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மே தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு ஒன்றியம், சொக்கனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு (எ) திருநாவுக்கரசு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர், அங்கன்வாடி பணியாளர் உள்ளிட்ட அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கிணத்துக்கடவில் இருந்து சொக்கனூர் வழியாக கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களை பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நலன் கருதி, பள்ளிக்கு செல்லும் நேரம் காலை 8.30 மணிமுதல் 9.30 மணிவரை நிறுத்தி வைத்து இயக்கவேண்டும் என கோரிக்கை வைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related posts

வில்லியனூர் வாலிபரிடம் 1 லட்சம் மோசடி

ஆனைமலையான்பட்டி குளத்துக்கரையை சேர்ந்த 55 குடும்பத்தினர் மாற்று இடம் கோரி மனு

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சியில் பெண் உள்பட மேலும் 2 பேர் கைது