பள்ளி ஆசிரியை பலாத்கார வழக்கை தொடர்ந்து கேரள காங்கிரஸ் எம்எல்ஏ மீது கொலை முயற்சி வழக்கு பதிவு

திருவனந்தபுரம்: பள்ளி ஆசிரியையை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கேரள காங்கிரஸ் எம்எல்ஏ எல்தோஸ் மீது திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் எல்தோஸ். இவர் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை கோவளம் போலீசில் பலாத்கார புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் புகார் தொடர்பாக எம்எல்ஏ எல்தோஸிடம் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்தபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.  வழக்கு விசாரணை குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன்படி ஆசிரியையிடம் குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரண நடத்தினர். அப்போது கோவளத்தில் வைத்து எம்எல்ஏ எல்தோஸ் தன்னை கடலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்ததாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் மீது தற்போது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக இருக்கும் எம்எல்ஏ எல்தோசை போலீசாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. தலைமறைவாக இருக்கும் எம்எல்ஏ எல்தோஸ் காங்கிரஸ் தலைவர்களையும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பலாத்கார புகார் கொடுத்த பள்ளி ஆசிரியையின் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு எம்எல்ஏ எல்தோசின் உடைகள் மற்றும் மது பாட்டில் கைப்பற்றப்பட்டன….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!