பள்ளிப்பாளையம் சிக்கன்

செய்முறை: சிக்கனை எலும்பு இல்லாமல் சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை உரித்து மிக்ஸியில் லேசாக அடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாயை கிள்ளி சேர்க்கவும். மிளகாய் சிவந்ததும் கறிவேப்பிலை, சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின், கழுவி வைத்த சிக்கனை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி விடவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் வற்றி சிக்கன் வெந்ததும் தேங்காய் துண்டுகள் சேர்த்து கிளறி இறக்கவும். எல்லா வகை குழம்புகள், பிரியாணி வகைகளுக்கும் இணையான துணை இந்த பள்ளிப்பாளையம் சிக்கன்….

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்