பள்ளிபாளையம் அருகே குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்-வேடிக்கை பார்க்க குவியும் மக்கள்

பள்ளிபாளையம் : குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை சரி செய்யாததால், மாலை நேரங்களில் பொதுமக்களின் பொழுது போக்கு தளமாக ஆவத்திபாளையம் மாறிவருகிறது.பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையம் காவிரி ஆற்றிலிருந்து, திருச்செங்கோடு நகராட்சிக்கு தண்ணீர் எடுத்து செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 4 மாதங்களுக்கு முன்பு ஆவத்திபாளையம் ஓடையின் மீதுள்ள குழாயில் ஏற்பட்ட உடைப்பை, நகராட்சி ஊழியர்கள் சரி செய்தனர். ஆனால் ஒரே வாரத்தில் அதே இடத்தில் குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சியடித்தது. ஊழியர்கள் அந்த இடத்தின் மீது சாக்குப்பை போட்டு மூடி விட்டு சென்றனர். இதனால் பீச்சியடித்த தண்ணீர் வழிந்தோடியது. கடந்த 2 நாட்களாக குழாயின் உடைப்பு அதிகமாகி, சுமார் 50 அடி தூரத்துக்கு தண்ணீரை பீய்ச்சியடிக்கிறது. தண்ணீர் காற்றில் கலந்து பனித்துளி போல் தூவுவதால், மாலை நேரங்களில் ஆவத்திபாளையம் பாலத்தில் வேடிக்கை பார்க்க மாலை நேரங்களில் மக்கள் கூடுகின்றனர். ஆற்றில் போதிய தண்ணீர் இல்லாதபோது, இது போல் தண்ணீர் வீணாவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு