பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

 

திருப்பூர், மே 29: திருப்பூரில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகம் அனுப்பும் பணி தொடங்கி உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வருகிற 6ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து பள்ளிகளை சுத்தம் செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, பல இடங்களில் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகள் சார்பில் இலவசமாக சமச்சீர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக வாசவி பள்ளியில் உள்ள புத்தக காப்பு மையத்தில் இருந்து அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. இதற்காக சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் அங்கு வந்து தங்கள் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பாடப்புத்தகங்களை பெற்றனர். பின்னர் அவற்றை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து