பள்ளிகளில் பரவும் கொரோனா தொற்று!: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பள்ளி மாணவிக்கு கொரோனா உறுதி..!!

நாமக்கல்: தமிழகத்தில் காட்டுமன்னார் கோவில், அரியலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவியர் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் வகுப்பறைகள் திறந்து பாடங்கள் நடைபெற்று வந்தது. இந்த சூழலில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மாணிக்கம்பாளையம் அரசு பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் பயின்ற பள்ளி உடனடியாக மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் காட்டுமன்னார் கோவில், அரியலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவியர் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் பள்ளிகளுக்கு சென்று தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி திறக்கப்பட்டு சில தினங்களே ஆன நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. …

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்