பள்ளப்பட்டி நகராட்சி பகுதிகளில் சொத்துவரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

 

அரவக்குறிச்சி, நவ.18: பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 27 வார்டுகளில் சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் பால்ராஜ் தெரிவித்துள்ளதாவது: பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 27 வார்டுகளில் சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் சென்ற (2021 – 2022, 2022-2023ம் ஆண்டுகளுக்கு) செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை ஆணையாளர் பள்ளப்பட்டி நகராட்சி உத்தரவில் பேரில் 27 வார்டுகளிலும் துண்டிக்கப்படுகிறது.

இதன்படி முதலாவதாக வார்டு எண்.5, 18 ஆகிய வார்டுகளில் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ளவர்களின் 5 பேரின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் சொத்துவரி குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ளவர்களின் இணைப்பு தினமும் துண்டிக்கப்படும். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செலுத்த வேண்டிய சொத்துவரி குடிநீர் கட்டணம் காலியிட வரி வசூல் நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு ஆணையர் பால்ராஜ் தெரிவித்தார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை