பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை கட்டிடம் இடிந்ததற்கு அதிமுக ஆட்சியே காரணம்: குடியிருப்பு வாசிகள் கண்ணீர்மல்க பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சியில் பழுதடைந்த கட்டிடத்தை பராமரிக்க பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததே தற்போது கட்டிடம் இடிந்ததற்கு காரணம் என கட்டிடத்தில் குடியிருந்த பொதுமக்கள் கண்ணீர் மல்க குற்றம்சாட்டியுள்ளனர். இடிந்து விழுந்த குடியிருப்பில் வசித்த பொதுமக்கள் கூறியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் இங்கு குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களும் பழுதடைந்துள்ளது. எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழும், எனவே எங்களுக்கு புதிய குடியிருப்பு கட்டி தர வேண்டுமென அனைவரும் ஒன்றாக பல முறை மனு அளித்தோம். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போதே, முறையாக பராமரிப்பு செய்து இருந்தால் எங்கள் குடியிருப்பு இடிந்து விழுந்து இருக்காது. கட்டிடத்தில் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்றும் எங்களுக்கு தெரியவில்லை. எங்களுக்கு நேற்று முன்தினம் இரவு 8மணிக்கு ‘டி’பிளாக் கட்டிடத்தில் அதிர்வுகள் இல்லாமல் இருந்து இருந்தால், டி பிளாக் கட்டித்தில் உள்ள 24 குடும்பங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மண்னோடு மண்ணாக மடிந்து இருப்போம். இந்த கட்டிடம் இடிந்ததற்கு அதிமுக ஆட்சியாளர்களே காரணம். இதற்கு அவர்கள் தான் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏழைகளான எங்கள் மனுவை அப்போழுதே கவனித்து இருந்தால் நாங்கள் வீடுகள் இன்றி சாலையில் நிற்க வேண்டியதில்லை. எங்கள் நிலைமை மீதமுள்ள 13 பிளாக்கில் வசித்து வரும் மக்களுக்கு ஏற்பட கூடாது. எனவே மீதமுள்ள 13 பிளாக் கட்டிடத்தையும் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும். மேலும், தற்போது உள்ள 13 பிளாக் கட்டிடங்களும் உறுதி தன்மை இல்லாமல் விரிசல்களுடன் தான் உள்ளது. எனவே இந்த பழுதடைந்த தரம் இல்லாமல் உள்ள குடியிருப்பை இடித்துவிட்டு புதிய குடியிருப்பை கட்டி தர வேண்டும். அதுவரைக்கும் இங்கு வசித்து வரும் 2 ஆயிரம் பேருக்கு மாற்று இடம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கண்ணீர் மல்க கூறினர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்