பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவிகுளம் கிராம அலுவலகம் முன்பு தர்ணா

மூணாறு, ஜூலை 3: கேரளா மாநிலத்தில் என்.ஜி.ஓ சங்கத்தின் மாநில குழு அழைப்பின் பேரில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள எல்லா கிராம அலுவலகம் முன்பும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்களின் சம்பள திருத்தமான நேற்று தொழிலாளர்களுக்கு பன்னிரெண்டாம் சம்பள ஊதிய திருத்தம் அனுமதிக்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பென்ஷன் தொகையை வழங்க வேண்டும்.

அவர்களுக்கு நிறுத்தப்பட்ட சலுகை திட்டங்களை மீண்டும் தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து என்.ஜி.ஓ தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் பாகமாக மாவட்ட என்.ஜி.ஓ சங்கம் தலைமையில் தேவிகுளம் கிராம அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்தை காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஏ.கே மணி துவக்கி வைத்தார். போராட்டத்தில் என்.ஜி.ஓ மாவட்ட மற்றும் மாநில தலைவர்கள் பங்கெடுத்தனர்.

Related posts

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ₹659.32 கோடி கடன் வழங்க இலக்கு

காரைக்கால்- திருவாரூர், தஞ்சை தடத்தில் விரைவில் இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும்

வெள்ளியணை அருகே 2 கிலோ எடையுள்ள குட்கா பறிமுதல்