பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

 

திருவள்ளூர்: நில அளவைத்துறையில் ஆதார ஊழியராக உள்ள புல உதவியாளர்களை தனியார் ஏஜென்ஸி மூலம் நியமிக்கும் நடவடிக்கையை உடனே திரும்ப பெறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் குமரன் அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர் ஜோதி, இணைச் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரதீப் ஹரேஷ்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மெல்கி ராஜா சிங், மாவட்ட தலைவர் இளங்கோவன், தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை புல உதவியாளர் சங்கம் மற்றும் தோழமை சங்க பொறுப்பாளர்கள், கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தாலிப் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நில அளவைத் துறையில் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட நிரந்தர பணியாளர்களான புல உதவியாளர் பணியிடங்களை தனியார் மூலம் அத்துக் கூலிக்கு நியமித்துக் கொள்ளலாம் என அரசு ஆணை பிறப்பித்ததன் மூலம் படித்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தாய் துறையாக விளங்கும் நில அளவை துறையின் அளவை பணியின் ஆதார ஊழியராக உள்ள புல உதவியாளர்களை தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்கும் நடவடிக்கை உடனே கைவிட வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்