பல்லாவரம்-குன்றத்தூர் சாலை விரைவில் அகலப்படுத்தப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

பல்லாவரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மலில் மக்கள் குறைதீர் முகாம், அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்தது. இதில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: பம்மல், அனகாபுத்தூர் பகுதியில் மக்களின் வீடுகளுக்கே நேரடியாக குடிநீர் வழங்கப்படுகிறது. கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் தற்போது விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. பல்லாவரம் – குன்றத்தூர் பிரதான சாலையை அகலப்படுத்தும் பணி விரைவில் நடைபெறும். மக்களின் அடிப்படை தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆட்சிக்கு வந்த 7 மாதத்தில் 300க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கியுள்ள மனுக்கள் துறை ரீதியாக பிரிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பம்மல் நகராட்சி முன்னாள் நகர் மன்ற தலைவர் வே.கருணாநிதி செய்திருந்தார். பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை