பல்லடம் பகுதியில் தொழிலாளியிடம் மொபட் பறித்த போலீஸ்காரர் கைது: சிறையில் அடைப்பு

பொங்கலூர்: பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிபவர் ராஜேஷ். இவர் கடந்த 30ம் தேதி பல்லடம் அருகே உள்ள சிங்கனூர் அரசு மதுபான கடை முன்பு சீருடை இல்லாமல் நின்றார்.  அப்போது அந்த வழியே  கட்டிடத் தொழிலாளி பூவரசன் மொபட்டில் வந்தார். அவரைத் தடுத்து நிறுத்திய ராஜேஷ், வண்டியின் ஆர்.சி.புக், லைசென்சை எடு என கேட்டு மிரட்டியுள்ளார். ஆர்.சி. புக் வீட்டில் உள்ளது என பூவரசன் கூறினார். இதையடுத்து மொபட்டை இங்கேயே நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று ஆர்.சி. புக்கை எடுத்து வா என்று போலீஸ்காரர் ராஜேஷ் கூறினார்.  பூவரசன் வீட்டிற்கு நடந்து சென்று ஆர்.சி. புக்கை எடுத்து வந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அங்கு போலீஸ்காரரும் இல்லை.  மொபட்டும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த பூவரசன் போலீஸ் கட்டு்ப்பாட்டு அறைக்கு போன் செய்து போலீஸ்காரர் மொபட்டை எடுத்து சென்றுவிட்டதாக புகார் செய்தார். இதையடுத்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில்,  விசாரணை செய்தபோது அவிநாசிபாளையம் போலீஸ்காரர் ராஜேஷ் மொபட்டை வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.  …

Related posts

போதைப்பொருள் விற்பனை செய்வதில் தகராறு 2 நண்பர்கள் கழுத்தறுத்து கொடூர கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை

திருமணத்துக்காக வந்து தங்கியபோது பெரியம்மா வீட்டில் 28 சவரன் அபேஸ்: இளம்பெண் மீது புகார்

கோவையை சேர்ந்த நகை வியாபாரியிடம் ஓடும் ரயிலில் 600 கிராம், ரூ.8.46 லட்சம் கொள்ளையடித்த 6 பேர் கும்பல் கைது