பல்லடம் நகராட்சியில் ரூ.2 கோடியில் வளர்ச்சி பணிகள்

பல்லடம், டிச.19:பல்லடம் நகராட்சியில் ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பல்லடம் நகராட்சி வார்டு எண் 10 மற்றும் 11ல் உள்ள மாணிக்காபுரம் குட்டையில் ரூ.44 லட்சம் மதிப்பில் நீர் நிலை மேம்பாட்டு பணிகள், வார்டு எண் 5ல் உள்ள மங்கலம் சாலையில் ரூ.32 லட்சம் மதிப்பில் தரை மட்ட நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி, மகாலட்சுமி நகர் பகுதியிலிருந்து செந்தோட்டம் கிழக்கு பகுதி வரை ரூ.24 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, வார்டு எண் 3ல் உள்ள கணபதி நகர் பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பில் பூங்கா மேம்படுத்தும் பணி.

வார்டு எண் 17ல் சி.டி.சி.காலனி முதல் வடுகபாளையம் வரை ரூ.74 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் பதித்து தரை மட்ட நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி ஆக மொத்தம் ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை அந்தந்த இடங்களில் அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், நகராட்சி ஆணையாளர் முத்துசாமி, பொறியாளர் சுகுமாரன், நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார், பொங்கலூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலுசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை