பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

2024ம் ஆண்டு பருவ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
திருவலம், ஜூலை 5: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2024ம் ஆண்ட பருவ தேர்வு இன்று வெளியிடப்படுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேர்க்காட்டில் உள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல், மே மாத பருவ தேர்வுகள் ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 30 வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் பல்கலைக்கழக htts://www.coe.tvu.edu.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் STUDENT LOGIN மூலமாக தங்கள் தேர்வு முடிவுகளை நாளை (இன்று) தெரிந்து கொள்ளலாம். மற்றும் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளின் மூலமும் தெரிந்து கொள்ளலாம், எனவும் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகலுக்கு மேற்கொண்ட பல்கலைக்கழக இணையதளம் மூலம் ஜூலை 8 முதல் 12ம் தேதி வரை மாணவர்களே நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை