பல்கலைக்கழக அளவில் கே.ஆர்.கல்லூரி மாணவிகள் சாதனை

கோவில்பட்டி, செப். 26: கோவில்பட்டி கே.ஆர்.கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்றுள்ளனர். 2022ம் ஆண்டிற்கான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுநிலை கணிப்பொறி அறிவியல் துறையில் முதல் 10 இடத்திற்கான தரவரிசை பட்டியலில் கே.ஆர்.கல்லூரி மாணவிகள் 4 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி ஏஞ்சல் 2வது இடத்தையும், மாணவி சிவரம்யா 3வது இடத்தையும், மாணவி பிருந்தா 8வது இடத்தையும், மாணவி அருணா 9வது இடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவிகளை கே.ஆர்.கல்வி குழுமங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கல்லூரி தாளாளர் அருணாசலம், முதல்வர் மதிவண்ணன், துறை தலைவர் சரவணன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்