பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக ஊட்டி மலை ரயில் பாதையில் யானைகள் முகாம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

குன்னூர்: பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக ஊட்டி மலை ரயில் பாதையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு  வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் காலநிலைக்கு ஏற்ப காடுகளில் நாவல் பழம், பலா உள்ளிட்ட பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளது. அவற்றை சாப்பிட கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வருகின்றன.இந்நிலையில், குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் அதிகளவில் பலாப்பழ மரங்கள் உள்ளன. இவற்றை உண்பதற்காக யானைகள் கூட்டமாக கே.என்.ஆர். மற்றும் புதுக்காடு போன்ற பகுதியில் முகாமிட்டுள்ளது. யானைகள் அவ்வப்போது சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். மேலும், யானைகளை புகைப்படம் எடுக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். …

Related posts

கரூர் சுங்ககேட் முதல் தான்தோன்றிமலை வரை ₹5 கோடியில் பேவர் பிளாக் நடை பாதை

சின்னாளப்பட்டியில் உள்ள சலவை கூடம் புதுப்பிக்கப்படுமா?

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்