பலாத்காரம் செய்து மீனவ பெண் கொலை வெளிமாநிலத்தவர்கள் வர உள் அனுமதிசீட்டு முறை: வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை:தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் அதிகளவில் நடைபெற்றுக் கொண்டுள்ள குற்றச் செயல்களின் எண்ணிக்கை, தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களால் உயர்ந்து வருவதை சுட்டி காட்டுகிறோம். இச்சூழலில், ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் கடற்பாசி எடுக்கச் சென்ற மீனவப் பெண் சந்திராவை, அங்கு இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. எனவே வெளியாரை வெளியேற்றுவது என்பது தமிழகத்தை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாகும். இதை உணர்ந்து, உள் அனுமதி சீட்டு முறையை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவ பெண்ணின் குடும்பத்திற்கு ₹50 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்