பலாக்கொட்டை, மாங்காய் அரைத்துவிட்ட சாம்பார்

செய்முறை:  வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் நீர் விட்டு கெட்டியாக அரைத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சாம்பார் வெங்காயம் அரிந்து வதக்கி ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல் ஊற்றி மேலும் 1 கப் நீர் விட்டு வதக்கிய வெங்காயம் போட்டு மாங்காயை அரிந்து போட்டு பலாக் கொட்டையின் மேல் தோலை உரித்து இரண்டாக அரிந்து போட்டு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து வேகவிடவும். காய்கள் முக்கால்பதம் வெந்ததும் அரைத்த விழுதினை ஊற்றி மேலும் இரு கொதி விட்டு துவரம்பருப்பு வேகவைத்ததையும் சேர்த்து தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்துச் சேர்த்து மல்லித்தழை தூவி இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கல்ந்து விடவும். இந்த மாங்காய் பலாக்கொட்டை சாம்பார் சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும். உப்புமா, பொங்கல் போன்றவற்றிற்கும் ஏற்றது….

Related posts

கலாக்காய் ஜூஸ்

கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

அன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி